வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வில் குழப்பம்!

வவுனியா தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், இன்று குழப்பம் நிலவியதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாதாந்த அமர்வு, தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற போது, முள்ளிவாய்காலில் படுகொலை செய்யபட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும், தேர்தல் வேட்பாளர்களுமான ப.சத்தியலிங்கம், செ.மயூறன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இதனால் சபை அமர்வில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், ஏனைய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமையால், எதிர்வரும் வெள்ளிகிழமை வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் போது, வெளிநடப்புச் செய்த உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!