நுவரெலியாவில் மழை : போக்குவரத்து பாதிப்பு!!

நுவரெலியாவில், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியகல சோதனைச் சாவடிக்கு சுமார் 100 மீற்றர் தொலைவில்;, பாரிய கல்லுடன் மண்சரிவு ஏற்பட்டதில், ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி ஊடான பொதுப்போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மண்சரிவு காரணமாக, குறித்த வீதியில் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு, வாகன நெரிசல் காணப்பட்டன.

இதனால், வீதியை புனரமைக்கும் பணிகளில், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள், மாற்று வீதியை பயன்படுத்துமாறு, பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!