மங்கள சமரவீரவிடம், 5 மணி நேரம் விசாரணை!!

குற்றப்புலானாய்வுத் திணைக்களத்தில் இன்று ஆஜராகிய, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம், 5 மணிநேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இன்று காலை, இரண்டாவது தடவையாக, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, கொழும்பில் குற்றப்புலானாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன் போது, சுமார் 5 மணி நேர வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

2019 ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்காளர்களை அழைத்து வருவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, கடந்த 14 ஆம் திகதியும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, சி.ஐ.டி.யில் முன்னிலையாகியிருந்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில், மங்கள சமரவீர நிதி அமைச்சராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!