பலாங்கொடையில் பலத்த காற்றுடன் மழை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலாங்கொடை பிரதேசத்தில் நேற்று மதியத்தில் இருந்து மழையுடன் கூடிய பலத்த காற்று வீசுகின்றது.நேற்று மதியம் வீசிய பலத்த காற்றினால் பலாங்கொடை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரஐவக, தியவின்ன, கல்தோட்ட போன்ற பிரதேசங்களில் ஐந்து வீடுகளுக்கு மேல் மரங்கள் முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதமடைந்துள்ளதாக பலாங்கொடை பிரதேச செயலாளர் எமன்த பன்டார தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 8 மணியளவில் வீசிய பலத்த காற்றில் பலாங்கொடை, பின்னவல அனுஹஸ் போதிகம பகுதியில் பாரிய எல்பிசியா மரம் ஒன்று மின்சார கம்பத்தின் மீது முறிந்து விழுந்ததினால், அப்பகுதியில் 10 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!