மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் அடைமழை காரணமாக நுவரெலியா பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு
தோட்டத்தில் உள்ள லயன் குடியருப்பின் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததன் காரணமாகவே,
வீடுகள் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வெள்ளத்தினால், 14 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பான இடங்களில் அவர்கள்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ லெச்சுமிதோட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததால், லெச்சுமி தோட்ட மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பிரதான வீதி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அடைமழை தொடர்ந்தும் பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!