ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு!

நுவரெலியா ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் குறித்த பாதை ஊடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

நேற்றைய தினமும் சில சம்பவங்கள் பதிவாகின. இந்நிலையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மரமும் சரிந்து விழுந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் பொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி, போக்குவரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!