மட்டக்களப்பில் நகைகள் திருட்டு – மூவர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி இரவு வேளையில் இரண்டு வீடுகளை உடைத்து நகைகளைக் கொள்ளையிட்ட ஒரு பெண் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசறி தெரிவித்தார்.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ரிஸ்வி நகர் மற்றும் பதுரியா வீதி ஆகிய இரு இடங்களிலுள்ள வீடுகளை இம்மாதம் 12ம் திகதியும் கடந்த மாதம் 28ஆம் திகதியும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் உடைத்து அங்கிருந்து ஐந்தரைப் பவுண் தங்கத்தை கொள்ளையிட்ட நபரும் குறித்த நகையை விற்பனை செய்த சந்தேக நபரின் சகோதரியும் நகைகளை வாங்கிய வியாபாரியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நகைகள் உருக்கிய நிலையிலும் ஆபரணமாகவும் ஐந்தரை பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!