யாழ். பலாலியில் தனிமைப்படுத்தல் நிறைவடைந்து வெளியேற்றம்!

யாழ்ப்பாணம் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த, 98 பேர் தமது சொந்த இடங்களுக்கு இன்றையதினம் அனுப்பி வைக்கப்பட்டனர்.கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரில் 6 மாத குழந்தை ஒருவர் உட்பட 10 சிறுவரும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த 98 பேரும், 22 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பீ.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து, தொற்றில்லை என்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இன்று காலையில் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பலாலி விமானப் படைத்தளபதி எயார் மார்சல் டி.எல்.எஸ்.டயஸ் சார்பாக பலாலி விமானப்படைத் தளபதி குறூப் கப்டன் எ.வி.ஜயசேகர, முன்னிலையில் மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு பேருந்து மூலம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!