யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட சுகாதார விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனின் தலைமையில் ‘சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை நிலைய உரிமையாளர்களுக்கு விஷேட விழிப்புணர்வு செயலமர்வு நடாத்தப்பட்டு, சுகாதார வழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.இச் செயலமர்வில் தற்போதுள்ள சூழலில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை தொழில்களை மேற்கொள்ளுதல், அனுமதிப்பத்திரம் பெறுதல், கைகழுவுவதற்கான வசதிகள் காணப்படுதல், ஆசனங்களிற்கு இடையே இடைவெளிகளை பேணுதல், பணியாளர், வாடிக்கையாளர்கள் விபரங்களை திரட்டுதல், முற்பதிவு முறையை உருவாக்குதல், வாடிக்கையாளர்கள் நலனை பேணுவதோடு, தொழில் புரிபவரின்; பாதுகாப்பை உறுதிசெய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

அத்தோடு சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார அதிகாரிகள் சிகையலங்கார மற்றும் அழகுக்கலை நிலையங்களை சோதனையிடுவார்கள் எனவும் மற்றும் முடிவெட்டுதல், முடியை குறைத்தல், முடிக்கு சாயமூட்டுதல், கை, கால் நகங்களை பேணுதல், கை, கால் உரோமங்களை அகற்றுதல் ஆகிய சேவைகளை மட்டுமே மேற்கொள்ள முடியுமென்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தொடர்பான விஷேட விழிப்புணர்வு, சிகையலங்கார மற்றும் அழகுக்கலை நிலைய உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள், மாநாகர சபை எல்லைக்குள் முயற்சியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக சுகாதார கல்வி மேம்பாட்டு உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட பிரதம சுகாதாரப் பரிசோதகர், மாநகரசபை பிரதம சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் செயலமர்வில் கலந்து கருத்துக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!