ஜனாதிபதியின் தேசிய படைவீரர்கள் தின வாழ்த்து!

2009 மே மாதம் 19 ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது, படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.தேசிய இராணுவ வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தேசத்தின் சுதந்திரம், ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்புகளின் அடையாளமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அடைந்த சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அர்த்தப்படுத்துவதற்கு ஒரு சுதந்திர தேசம் என்ற வகையில் நாம் ஒன்றுபட்டு எழுந்திருக்க வேண்டும்.

பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அதேநேரம் தேசத்தின் நன்மையை முதன்மைப்படுத்தி உலகின் ஏனைய நாடுகளுடனும் இணைந்து எமது இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!