விசுவமடுவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள நெத்தலியாறு ஆற்றங்கரையோரப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு, அங்கிருந்த பெருமளவான கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.விசுவமடு பகுதியில் உள்ள நெத்தலியாறு ஆற்றங்கரையோர பகுதியில் சமூக விரோதிகளால் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயக்கப்பட்டு வருவதாக பொது மக்களால் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதனை அடுத்து, அங்கு உடனடியாக விரைந்த புதுக்குடியிருப்பு பொலிசார் மக்களின் பங்களிப்புடன் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்டனர்.

இதன்போது 50 லீற்றருக்கு மேற்பட்ட கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் 8 பீப்பாக்கள் மற்றும் உபகரணங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் 3 பீப்பாய்களில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு காச்சுவதற்கான பதப்படுத்தப்பட்ட கலவை பொலிசாரால் அதே இடத்தில் வைத்து அழிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக விசுவமடு பகுதியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!