யாழ் மானிப்பாயில் தாலி அறுப்பு!

யாழ்ப்பாணம் நவாலியில், பெண்ணொருவரின் தாலி அறுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால், சங்குவேலி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான அணியினராலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நவாலியில் நேற்று மாலை குடும்பப் பெண்ணின் தாலியை அறுத்த வழிப்பறிக் கொள்ளையர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவாலி சின்னப்பா வீதியில் சென்ற இளம் குடும்பப் பெண்ணின், 11 பவுண் தாலிக் கொடியை அபகரித்த சந்தேக நபரே மானிப்பாய் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் இலக்கத்தை வைத்து கொள்ளையர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

11 தங்கப் பவுண் பெறுமதியான தாலிக்கொடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!