வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கான நினைவேந்தல் நிகழ்வு, வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் இன்று காலை இடம்பெற்றது.

நகர சபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொது ஈகைச்சுடரினை இறுதிப் போரில் கணவனை இழந்த பெண் ஒருவர் ஏற்றிவைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் விளக்கேற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராயா, தியாகராயா, நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு நிறைவுறும் போது அப்பகுதிக்கு சென்ற வவுனியா பொலிசார் கூட்டமாக நிற்க வேண்டாம் என்றும், அஞ்சலி செலுத்தியவர்களை அப்பகுதியிலிருந்து அகன்று செல்லுமாறும் தெரிவித்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!