மன்னார் நகர சபை அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த மக்களுக்கு மன்னார் நகர சபையின் அமர்வில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னார் நகர சபையின் 27 ஆவது அமர்வு இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையில், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த மக்களுக்கு தீபம் ஏற்றப்பட்டு பின்னர் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

நகர சபையின் தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!