த.தே.ம.மு உறுப்பினர்கள் 11 பேருக்கு, யாழில் நிகழ்களை நடாத்தத் தடை!!

நாடு முழுவதும் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் பொதுமக்களை ஒன்று திரட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் தடை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதே இந்தக் கட்டளையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மனுவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணிகள் நடராசா காண்டீபன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் மற்றும் வரதராசா பார்த்திபன், வாசுகி, கிருபாகரன், தனுஷன், விஷ்ணுகாந்த் மற்றும் தமிழ்மதி ஆகிய 11 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்கள் நிகழ்வை நடத்தத் தடை உத்தரவு வழங்குமாறு, பொலிஸாரால் மன்றில் கோரப்பட்டதற்கிணங்க, மக்களை ஒன்று திரட்டும் நிகழ்வுகளை நடாத்தத் தடை விதிக்கப்படுவதாக, யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான நீதிமன்றின் கட்டளைகளை யாழ்ப்பாணப் பொலிசார் நேற்றிரவு, முன்னணி உறுப்பினர்களின் வசிப்பிடங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வுகளில் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதும், அஞ்சலி நிகழ்வை தடை செய்யக் கோரி, யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று, நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையிலேயே, முன்னணியினர் நிகழ்வுகளில் ஈடுபடத் தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவு நேற்றிரவு, முன்னணி உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இன்றைய நினைவேந்தல் நிகழ்வுகளில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பொலிசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முன்னணியின் பிரமுகர்களின் வீடுகளுக்கு நேற்;றிரவு சென்ற பொலிஸார் இது குறித்த நீதிமன்ற உத்தரவை அவர்களுக்கு வழங்கியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வந்த அஞ்சலி நிகழ்வுகளின் எதிரொலியாக இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், நடராஜா காண்டீபன், கனகரட்ணம் சுகாஸ், வரதராஜா பார்த்தீபன் உள்ளிட்ட 11 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணித்து, 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு, பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கு நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

இதற்கான கட்டளைகளை யாழ்ப்பாணப் பொலிசார் நேற்றிரவு அவர்களின் வசிப்பிடங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பித்தனர்.

அஞ்சலி நிகழ்வுகளில் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதும், அஞ்சலி நிகழ்வை தடைசெய்யக் கோரி, யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே முன்னணியினரை தனிமைப்படுத்தும் உத்தரவு நேற்றிரவு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!