நாட்டில் கொரோனாத் தொற்றாளிகள் எண்ணிக்கை 981ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மொத்தமாக 981ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்கு உள்ளானவர்களில் 538 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொடர்ந்து 434 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 9 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!