நாய்களுக்கு அறுவை சிகிச்சை!

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடையில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உள்ளே கட்டா காலியாக திரியும் நாய்களுக்கும், சுற்றியுள்ள வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் இன்று அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நாய்களுக்கு அறுவை சிகிச்சை நடத்துவதன் மூலமும் ரேபிஸ் தடுப்பூசி வழங்குவதன் மூலமும் ரேபிஸைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனால். இந்த வேலை திட்டம் நடத்தப்படுவதாகவும், குறித்த வேலைத்திட்டம் இன்னும் ஐந்து நாட்களுக்கு நடாத்தபட உள்ளதாகவும்
இம்புள்பே பொதுசுகாதார அதிகாரி லலித்த குமார ஸ்ரீ தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!