ஊரடங்கு கடுமையாக அமுல்: அஜித் ரோகண

நாட்டில் ஊரடங்கு உத்தரவு இன்று கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வீடுகளில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு இன்னமும் நடைமுறையில் உள்ளதால் குறித்த பகுதிகளில் அடுத்த வாரம் முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று மேலும் பரவாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மக்கள் சமூக விலகல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண, சில பகுதிகளில் திடீர் சோதனைகள் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!