நாட்டில் வளி மாசடைவு வீதம் மீண்டும் உயர் மட்டத்தில்!!

நாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், வளி மாசடைவு வீதம் மீண்டும் உயர் மட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச்சட்ட அமுலாக்கம் காரணமாக, வாகனங்கள் பயணிக்காமை மற்றும் கைத்தொழிற்சாலைகள் இயங்காமை போன்ற காரணத்தால் நாட்டில் வளி மாசடைவு வீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.

இந்நிலையில், ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வாகனங்கள் மற்றும் கைத்தொழிற்சாலைகள் மீள இயங்க ஆரம்பித்துள்ளதால் வளி மாசடைவு அதிகரித்து வருவதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பில் தற்போது வளி மாசடைவு தன்மையானது 50 வீதமளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!