சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை!!

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நாளை மாலை 5.00 மணிக்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெறும் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், கொரோனா தொற்று, அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!