மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா, வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.குமார சிறீ, மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஏ.சத்திய சீலன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்சனி, பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

அத்தோடு திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

14 பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 44 பதக்கங்களைப் பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முதலாமிடத்தையும், 17 பதக்கங்களைப் பெற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் இரண்டாமிடத்தினையும், 13 பதக்கங்களைப் பெற்று ஆரையம்பதி பிரதேச செயலகம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் திணைக்களங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 247 புள்ளிகளைப் பெற்று பொலிஸ் திணைக்களம் முதலாமிடத்தினையும், 142 புள்ளிகளைப் பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இரண்டாமிடத்தினையும், 117 புள்ளிகளைப் பெற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!