மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தீர்மானம்!!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் குறிப்பிடத்தக்களவு ஆளணியை ஈடுபடுத்தி, சிற்சில வரையறைகளுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், வாகன இலக்கத் தகடுகளை வழங்குதல், வாகனங்களைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல் உள்ளிட்ட திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, திணைக்களத்தின் ஒரு நாள் சேவையும் மீள அறிவிக்கப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!