யாழ். வடமராட்சி கிழக்கில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் குடியேற்ற கிராமத்திற்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவொன்று, பொதுமக்களை வாள்களால் வெட்டியுள்ளதுடன், சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளது.

குடத்தனை வடக்குப் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், மோதலாக மாறியதன் பின்னணியிலேயே வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி கிராம சேவகர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்கவோ, காயப்பட்டவர்கள் சிகிச்சைக்காக செல்வதற்கோ மக்கள் அச்சமடைந்திருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!