ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 72 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றால் இன்று 119 பேர் உயிரிழந்தமையையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் ரஷ்யா 3 ஆவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!