நாடு முழுவதிலும் இன்று ஊரடங்குச் சட்டம் அமுலில்!!

நாடு முழுவதிலும் நேற்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், நாளை அதிகாலை 5 மணிவரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

இதன்பின்னர், எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தினமும் இரவு 8 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கம் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட, ஊரடங்குச் சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!