நாட்டில் 960 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ளது.

957 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் மூன்று பேர் இனங்காணப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தொற்று உறுதியானவர்களில் 428 பேர், தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!