உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளாந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி வாசம் உதவும் கரங்கள் அமைப்பு ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மேற்படி அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து குறித்த அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் வே.பிரபாகரன் டான் குழுமத்தின் ஏற்பாட்டில் இவ் உதவியினை வழங்கி வைத்தார்.

பேத்தாழை ஆற்றில் அன்றாடம் மட்டி எடுக்கும் தொழிலினை மேற்கொண்டு வந்த மக்களுக்கே இவ் உதவி வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!