அம்பாறையில் இருவர் கைது!

அம்பாறை மாவட்ட நிந்தவூர் கடற்கரை வீதியில் கடந்த 12ஆம் திகதி ஹெரோயின் 58 மில்லி கிராம் தன் வசம் வைத்திருந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்கில் சம்பவத்தினத்தன்று சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றிருந்தார்.குறித்த நபர் இன்றைய தினம் நிந்தவூ10ர் மாந்தோட்டச் சந்தியில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜெயலத் தலைமையில் சம்மாந்துறை குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி விஜயராஜா மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் யனோசன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக மறைந்திந்த 26 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைதான குறித்த சந்தேக நபரிடம் 590 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அதன் பின்னர் அச்சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது ஹெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காகவே தானும் மற்றுமொரு சந்தேக நபரான 720 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைதான 20 வயது மதிக்கத்தக்க நபரும் நிந்தவூர் 9 பகுதியில் உள்ள அஹதியா பாலர் பாடசாலை ஒன்றில் கடந்த 6 ஆம் திகதி மின்விசிறிகள் மூன்று களவாடி விற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய களவாடப்பட்ட பொருட்களை வாங்கிய நபரை பொலிஸார் அடையாளம் கண்டு இவ்வாறு களவாடி விற்கப்பட்ட பொருள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இவ்வாறு கைதான இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை விசாரணையின் அடிப்படையில் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காகவே தாம் களவாடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான இரு சந்தேக நபர்களும் தடயப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நாளை ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!