சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி, வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறு, நுவரெலியா கொட்டகலை நகர வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை நகரில் எஸ்.சௌந்தராகவன் தலைமையில், பொது சுகாதார அதிகாரிகள், இன்று திடீர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இறைச்சி கடைகள், மரக்கறி கடைகள், பழக்கடைகள், மதுபானசாலைகள், ஹோட்டல்கள் உட்பட மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக செல்லும் வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் போது, மாட்டிறைச்சி கடையொன்றில், பழுதடைந்த நிலையில் இருந்த 30 கிலோ மாட்டிறைச்சி, அவ்விடத்தில் வைத்தே அழிக்கப்பட்டதுடன், கடை உரிமையாளருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

முகக் கவசம் மற்றும் கையுறை அணிதல், சமூக இடைவெளி உட்பட, சுகாதார நடைமுறைகள், வியாபார நிலையங்களில் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும், அவதானம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!