ஐக்கிய மக்கள் சக்தியைப் பலவீனப்படுத்த முயற்சி : சுஜீவ

ஐக்கியமக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்சகார்கள் முயற்ச்சி – சுஜீவசேனசிங்கரணில் – ராஜபக்ஷ தரப்பினர் ஒன்றிணைந்து ஐக்கியமக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவசேனசிங்க, ஐக்கியமக்கள் சக்திக்கு எதிராக எத்தந்தவிதமான வழக்குகளை தொடர்தாலும் அதனை வெற்றி; கொள்வதாகவும்,தங்களது கட்சி தொடர்பில் எந்தவித சட்டசிக்கலும் இல்லை எனவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஐக்கிய மக்கள் சக்தி நீதியான முறையிலேயே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதியை தேர்தல்கள் ஆணையகமும் வழங்கியுள்ளது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷாக்களுடன் கொண்டுள்ள டீல் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் எமது கட்சியின் சட்ட சிக்கல் தொடர்பில் வழங்கு தாக்கல் செய்துள்ளார்.

எந்தவித வழக்கை தொடர்ந்தும் எம்மை பலவீனப்படுத்த முடியாது.

நாட்டிலுள்ள சிறந்த ஜனாதிபதி சட்டதரணிகள் எம்மோடு இணைந்துள்ளனர். அதனால் எந்த வழக்கையும் நாங்கள் இலகுவில் வெற்றிக்கொள்வோம்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகளும் இல்லாத நிலையில்
எமது கட்சி; தொடர்பில் பிரசாரத்தை மேற்கொள்வதற்கான சந்தரப்பத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

கடந்தகாலங்களில் ரணில் தரப்பினர்களினாலேயே எமக்கு பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன தற்போது அந்த குழுவினர் எம்மை விட்டு விலகிச் சென்றுள்ளதால், எமக்கு சுயாதீனமாக செயற்பட முடியும். ராஜபக்ஷாக்களுக்கு சவால் ஏற்படுத்தும் ஆளுமை எம்மிடம் உள்ளது.

அதனால் யாருடைய எதிர்ப்புகளையும் கண்டு அச்சம் கொள்ளமாட்டோம். பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பில் எமக்கு எந்தவிதஆட்சேபனையும் இல்லை.

நாளை தேர்தலை நடத்துவதென்றாழும் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் தேர்தலை நடத்துவதற்கான
சூழ்நிலையில் நாடு இல்லை.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையில் மக்கள் தற்போது ஒருவேளை உணவை பெற்றுக் கொள்வதிலும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசாங்கம் அரசியலமைப்பை மீறி செயற்படுவதை கண்டும் நாங்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதற்கான காரணம் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தடுப்பதற்காக அரசாங்கம் எவ்வாறான முயற்சிகளை எடுத்தாலும், அதற்கு
இடையூறுவிளைவிக்க கூடாது என்பதற்காகவே.

அரசியலமைப்பை மீறி நிதி ஒதுக்கீடு, கடன் பெறுதல் மற்றும் நாணய அச்சிடல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில் நாங்கள் அமைதி காத்து வருகின்றோம் என்றும் இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவசேனசிங்க தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!