அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை : இரான் விக்ரமரத்ன

அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தாமே அனைத்தயும் செய்து முடிப்பது போல் தற்போதைய அரசாங்கம் கூறி வருவதாக முன்னாள் பாராளுமனற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன குற்றம் சாட்டியுள்ளார்கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

2015ம் ஆண்டு நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாம் அரச ஊழியர்களுக்கு சம்பளங்களை அதிகரித்து தருவதாக ஒரு வாக்குறுதியை வழங்கினோம், அதே போல் நாம் ஆட்சியமைத்து முதலாவதாக செய்த பனி அரச ஊழியர்களின் சம்பளங்ககளை அதிகரித்ததேயாகும், இறுதியாக 2006ம் ஆண்டிலே அரச ஊழியர்களின் ஆரம்ப சம்பளம் அதிகரிக்கப்பட்டது, அதனைத்தொடந்து அதிகரிக்கப்படாமலேயே இருந்த சம்பளம் எமது ஆட்சியின் போதே அதிகரித்து வழங்கப்பட்டது.

நாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய ஒவ்வொரு அரச ஊழியர்களினதும் சம்பளங்களை 10 000 ரூபாவினால் அதிகரித்தோம், இவ்வாறு வழங்கிய 10 000 ரூபாவும் 5 தவணைகளில் முறையாக வழங்கப்பட்டது 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முறையாக அதிகரிக்கப்பட்டு வந்த சம்பள அதிகரிப்பு 2020ம் ஆண்டிலேயே தற்போதைய அரசங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு பெற்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கொவிட்-19 வைரஸை காரணம் காட்டி வருகின்றனர், மேலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறி வைத்து வருகின்றனர், வழங்கிய வாக்குறுதிகளையும் வழங்காது சம்பளங்களையும் குறி வைத்துள்ள நிலையில் நாம் அரசு ஊழியர்களின் சம்பளங்களையும் தொழிலையும் தாம் பாதுக்கப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!