நுவரெலியா கொட்டக்கலையில் விபத்து: ஒருவர் படுகாயம்!

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.படுகாயமடைந்தவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கள், கொட்கலை கொமர்சல் பகுதியின் முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த டிப்பருடன் மோதுண்டு, விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்துத் தொடர்பில் கொட்டக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!