பொலிஸ் சேவையில் ஓய்வு பெற்றவர்களுக்கு யாழில் உதவி!

பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பொலிஸாரின் குடும்பங்களுக்கே இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து சாவகச்சேரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல தலைமையில், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்கவின் பங்குபற்றலுடன் 12 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் பொலிஸ் சேவையில் ஓய்வு பெற்ற 10 குடும்பங்கள் மற்றும் பொலிஸ் சேவையில் உயிரிழந்த 2 குடும்பங்கள் உட்பட 12 குடும்பங்களுக்கே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!