ஹட்டனில் தபாலகம் பூட்டு – அரச கொடுப்பனவுகளைப் பெற வந்த மக்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் தபால் நிலையம் இன்று திறக்கப்படாத காரணத்தால் தூர பிரதேசங்களிலிருந்து முதியோர் கோடுப்பனவு மற்றும் 5000 ரூபா கொரோனா பாதிப்பு கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை பெறுவதற்காக வந்தவர்கள் கொடுப்பனவுகளை பெற முடியாது பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.குறித்த தபாலகம் சனிக்கிழமை நாட்களில் வழமையாக அரைநாள் பகல் ஒரு மணிவரை ஏனைய நாட்களில் திறந்திருக்கும் ஆனால் இன்றைய தினம் தபாலகம் மூடப்படுவதாக பொது மக்கள் அறியாததால் இன்று அதிகாலை முதல் கொடுப்பனவுகளை பெறுவதற்காக வருகை தந்திருந்தனர்.

இன்றை தினம் குறித்த கொடுப்பனவுகளைப் பெற முடியாத மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!