டான் குழுமத்தின் ஏற்பாட்டில் நிவாரண உதவி!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், சகவாழ்வை மேம்படுத்தி, நல்லிணக்கத்தைக் கட்டியnழுப்புவதற்கான நடவடிக்கையை அம்பாறை சர்வமத குழு ஏற்படுத்தி வருகின்றது.இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் கொரோனா தொற்றால் தொழில் இழந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றது.

அட்டாளைச்சேனை திராய்க்கேணி கிராமத்தின் ஸகாத் குடியேற்ற பிரதேச மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணி அட்டாளைச்சேனை சர்வமத குழு மற்றும் அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் முன்னெடுப்புடன், டான் குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.

திராய்க்கேணி கோவில் தலைவர் எஸ்.கார்த்திகேசு தலைமைiயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்ஏ.சி. அகமட் நஸீல், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எப்.நதீர் மற்றும் சர்மத குழுவினர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!