நுவரெலியா ஹட்டனில் மண்சரிவு!

நுவரெலியா ஹட்டன் நோட்டன்பிரிஜ் பிராதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால், அவ வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.நேற்று மாலை முதல் இடைவிடாது பெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

எனவே, போக்குவரத்துக்காக இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இராணுவம், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!