யாழில் சில பகுதிகளில் நாளைய தினம் மின் துண்டிப்பு!

யாழ் குடாநாட்டில் உயரழுத்த, மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக சில பகுதிகளில் நாளைய தினம் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளது.நாளை காலை 08.30 மணி முதல் மாலை 01 மணிவரை யாழ் பிரதேசத்தில் ஆரியகுளத்திலிருந்து முட்டாசுக்கடை சந்தி வரை, மணிக்கூட்டு வீதி, கஸ்தூரியார் வீதியின் ஒரு பகுதி, ராஜா திரையரங்கு வெலிங்டன் சந்தி, பெரியகடை வீதி, பழைய தபாற்கந்தோர் வீதி, ஸ்ரான்லி வீதி, பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் கம்பனி ஸ்ரான்லி வீதி, மக்கள் வங்கி ஸ்ரான்லி வீதி, மொபிடெல் பிரைவேற் லிமிடெட் ஸ்ரான்லி வீதி, லிங்கம் கிறீம் ஹவுஸ், சிறி நதியா நகை மாளிகை, ராஜா ரோல்கீஸ், ரொப்பாஸ், அன்னை நாகா பூட் சிற்றி, சிவராதா, ஹற்றன் நசனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், எல்ஓஎல்சி ஆகிய சிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!