கல்லாறு, குருமன்வெளி பிரதேசத்தில் கிணற்று நீர் மட்டம் வற்றியதால் குழப்பம்!

மட்டக்களப்பில் சுனாமி வருவதற்கான எந்த விதமான விஞ்ஞான ரீதியான அறிகுறியும் இல்லை எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை வதந்திகளை நம்பவேண்டாம் என அனர்த்த இடர் முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.கல்லாறு, குருமன்வெளி பிரதேசத்தில் சிலரது கிணற்று நீர் மட்டம் நேற்றிரவு வற்றிபோயுள்ளது.

இதனையடுத்து மக்கள் சுனாமி போன்ற அனர்த்தம் இடம்பெறப் போகின்றது என அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியதையடுத்து இந்த செய்தி காட்டுத Pபோல பரவியதையடுத்து மட்டக்களப்பு கல்லடி அம்பாறை மாவட்ட கரையோரத்திலுள்ள பல பகுதிகளில் இருந்து மக்கள் அச்சத்தினால் வீடுகளை விட்டு வெளியேறினர்.

தற்போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் குறையும்போது கரையிலுள்ள நீர் மட்டங்களை கடல் உள்வாங்கும். அதனால் இது ஒரு சாதாரண நிலை என அனர்த்த இடர் முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.

இதேவேளை அனர்த்தம் தொடர்பில் மக்கள் போலியான செய்திகளை அல்லது, தகவல்களை நம்பி வீணாக பீதியடையத் தேவையில்லை என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!