கொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி அதிகரிப்பு!

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு சிறீலங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் என்பன 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளன.50 மில்லியன் ரூபாவுக்கான காசோலைகள் சிறீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.மொபிடெல் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி நலின் பெரேரா உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது.

அதற்கான காசோலை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முக்கியஸ்தர்கள் இதன் போது
சமூகமளித்திருந்தனர்.

இதேவேளை நேச்சுரப் இண்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் 10 மில்லியன் ரூபாவையும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம் 03 லட்சம் ரூபாவையும், திரு.டிசில் குரே ஒரு லட்சம் ரூபாவையும், முன்னாள் அமைச்சரவை அமைச்சு செயலாளர்களின் சங்கம் ஒரு மில்லியன் ரூபாவையும், சிறீலங்கா பொதுஜன பொறியியலாளர்கள் முன்னணி ஒரு மில்லியன் ரூபாவையும், இலங்கை கால்பந்து சம்மேளனம் 02 மில்லியன் ரூபாவையும், பாரதி ஏர்டெல் லங்கா தனியார் நிறுவனம் 1.2மில்லியன் ரூபாவையும், செர்டிஸ் லங்கா பாதுகாப்பு தீர்வு தனியார் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும், திரு. ரிச்சட் பெர்னாண்டோ ஒரு மில்லியன் ரூபாவையும், திரு.எஸ்.ஏ.சமரதுங்க ஐம்பதாயிரம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

நேற்று பிற்பகலாகும் போது கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாவை கடந்திருந்தது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!