வவுனியா பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் பாதிப்பு!

வவுனியா நெடுங்கேணி பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்கள் தற்போது நிலவும் அசாதாரண
சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா வடக்கு பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கமானது பனம்சோடா, பதநீர், வெல்லம், ஒடியல்மா, பனங்களி ஆகிய
உற்பத்திகளை மேற்கொண்டு வந்த நிலையில்;, கொரோனாத் தொற்று அபாயம் காரணமாக உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்டது.

இதனால் இங்கு பணியாற்றிய பணியாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே, சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் பாதிக்கப்பட்டுள்ள இவ் உற்பத்தி தொழிற்துறைதொடர்பில் அவதானம் செலுத்துமாறு
கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!