ராஜிதவின் கைது அரசியல் பழிவாங்கல் இல்லை – கம்பன்பில

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கைது அரசியல் பழிவாங்கல் என, ஐக்கிய தேசிய கட்சியினரால் கூறமுடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரியவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘ராஜித சேனாரத்னவின் கைது அரசியல் பழிவாங்கல் இல்லை. காரணம் தற்போதைய நீதிவான் மற்றும் நீதிமன்ற சேவையாளர்களை பதவியில் அமர்த்தியது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே.

ஆகவே தற்போதைய உயர் நீதிமன்ற நீதிவான் அரசியல் பழிவாங்கல் செய்வதாக தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ராஜித சேனாரத்ன கடந்த 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்ய்யப்பட்ட போது, ஐக்கிய தேசிய கட்சியினர் நீதிமன்றம் நேர்மையாக நடந்துள்ளது என பாராட்டினார்கள்.

ராஜித சேனாரத்னவின் தீர்ப்பில் தவறு என தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராஜிதவின் கைது அரசியல் பழிவாங்கல் என தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் இரண்டு நாக்குகள் கொண்டவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு காரணம், ஒரே நபர் இரண்டு விதமாக பேசுகிறார்கள்’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!