நாட்டில் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, குருணாகலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின், நாகொட, பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியகம மற்றும் போத்தல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட,கிரியெல்ல, அஹங்கம, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர, புலத்சிங்கல, வலல்லவிட்ட, ஹொரன, இங்கிரிய மற்றும் மதுகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொது மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்து மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!