கொரோனா – உயிரிழந்தவர்களை தகனம் செய்தமையை அரசியலாக்குவது தவறு!

தகனம் செய்யப்பட்ட உடல்களை கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஸாத் பதியுத்தீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயச்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

‘கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை மாத்திரம் தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல.

தகனம் செய்யப்பட்ட உடல்களைக் கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஸாத் பதியுத்தீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முஸ்லிம் சமூகத்தினரை தூண்டிவிடுகின்றனர்.

உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை தகனம் செய்ய வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவரது உடலை தகனம் செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. இதனை அரசியலாக்குவது முற்றிலும் தவறு.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களையும் பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்காமல் இவர்கள் முஸ்லிம் மக்களை தவறான கோணத்தில் திசைத்திருப்பி விடுகின்றார்கள்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தவே முயற்சிக்கின்றார்கள். என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!