நாட்டில் நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்வு!

நாட்டில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.களனி கங்கை, களு கங்கை, ஜிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் குறித்த ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!