யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு! – த. சத்தியமூர்த்தி

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறினார.;

‘கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் சங்கானை , உரும்பிராய் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான நோயாளிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக மக்கள் தமது வீட்டுச் சூழலை துப்பரவாக வைத்திருந்து டெங்கு நுளம்பு பரவக்கூடிய ஏதுநிலையை தவிர்க்க வேண்டும்.

அதன் ஊடாகவே டெங்கு நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்’ என்றும் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீட்டின் உட்பகுதிகளிலும், வெளிச் சுற்றாடலிலும் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதைக் கிரமமாக பரிசோதனை செய்து அப்புறப்படுத்தி அவ்வாறான நிலமை இல்லாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என யாழ்ப்பாணம் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு தற்போதைய சூழ்நிலை காரணமாக சுகாதாரத் துறைசார்ந்த உத்தியோகத்தர்களின் பங்களிப்பை டெங்குநோய் கட்டுப்பாட்டுக்கு பூரணமாக வழங்க முடியாமல் உள்ளது எனவே பொதுமக்களாகிய உங்களின் பங்களிப்பை வழமையை விட அதிகமாக எதிர்பார்க்கின்றோம்.

உங்கள் வீடுகளில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின் போது இனங்காணப்படின் இவ் நெருக்கடியான நிலமையினைக் கருத்திற்கொண்டு எம் மக்களை நோய்த் தாக்கத்தில்; இருந்து பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்ககை மேற்கொள்ள வேண்டியேற்படும் என்பதனையும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம். என்றும் யாழ்ப்பாணம் சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!