மே மாதத்துக்கான நிவாரணப் பணி ஆரம்பம் – சுகாதார அமைச்சு

கொரோனா தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மே மாதத்துக்கான 2ம் கட்ட நிவாரணப் பணி, எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 36 ஆயிரத்து 130 மில்லியன் ரூபா நிவாரண கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த வேலைத் திட்டத்துக்கு அமைய சமுர்த்தி பெறும் 24 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 6 இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்ட 12 ஆயிரத்து 641 பேருக்கும், சிறுநீரக நோயாளிகள் 44 ஆயிரத்து 291 பேருக்கும் 5000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட நிவாரண பணி எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!