நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களில், மறு அறிவித்தல் வரை, ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி குறித்த மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு 18 ஆம் திகதி முதல், 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் காணப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!