ஹட்டனில், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!!

கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை மீறி, உணவு பரிமாறிய ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு, நுவரெலியா ஹட்டன் பொலிஸார், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், சுகாதார பிரிவின் நிபந்தனைகளின் அடிப்படையில், ஹோட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அந்த வகையில், ஹோட்டல்களில் உணவு பரிமாற முடியாது எனவும், பொதி செய்து விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டது.

அதனையடுத்து, இன்று ஹட்டன் பொலிஸாரும், சுகாதார பிரிவினரும், ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

இதன் போது, சில ஹோட்டல் உரிமையாளர்கள், நிபந்தனைகளை மீறி, ஹோட்டல்களின் மேல் மாடியில் உணவு பரிமாறியதை அவதானித்ததை அடுத்து, அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவ்வாறு செயற்பட்டால், கொரோனா சுகாதார நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!