முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய வாழ்வாதார செயலணி கண்டனம்!

ஆயுதப் போராட்டம் மூலம் பல நன்மைகள் கிடைத்த போதும், ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், ஆயுதப் போராட்டம் தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்படுவது, கண்டனத்திற்குரிய செயலாகும் என, முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய வாழ்வாதார செயலணி தெரிவித்துள்ளது.இன்று, வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் வி.ஈழம் மற்றும் பேச்சாளர் ப.அறிவாளன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

பின்வாசலால் வந்தவரே சுமந்திரன் இவர் கருத்து தெரிவிப்பதா!!

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு பின்வாசலால் வருகைதந்த சுமந்திரன் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி கருத்து தெரிவித்திருப்பதானது கண்டனத்திற்குரியதாகும்.

சுமந்திரன் தொடர்பான கருத்துக்கள் ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ்மக்களின் ஆயுத விடுதலை போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் விதமாக அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கபட்டதன் பின்னர் பின்வாசலால் வருகைதந்த சுமந்திரன் அது தொடர்பாக கருத்து தெரிவித்திருப்பதானது கண்டனங்களுக்குரியதே. எனவே குறித்த விடயத்தில் ஊடகங்கள் வாயிலாக மாத்திரம் கருத்து தெரிவிப்பதை விடுத்து அக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை கேட்டுகொள்கின்றோம். இது முன்னாள் போராளிகளாகிய நாங்கள் விடுக்கின்ற அன்பான வேண்டுகோள்.

எனவே தமிழ் மக்களுடைய மனங்களிலே வேதனையை கொடுக்கின்ற இவ்வாறான செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என கேட்டுகொள்கின்றோம்.

அத்துடன் தேர்தல் காலங்களிலும், மாவீரர் தினங்களிலும் முன்னாள் போராளிகளை அரவணைத்து ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள், தமது அரசியல் நாடகங்கள் முடிந்தபின்னர் எம்மை கண்டுகொள்வதில்லை என்றும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!