சர்வதேச நிதி உதவிகள் கிடைக்கவில்லை : பந்துல

எமக்கு பல வழிகளிலும் கொவிட்-19 வைரசுக்காக நிதியுதவி கிடைக்கப்பெற்று வருவதாக பலர் குறிப்பிட்டு வருகின்றனர், ஆனால் உண்மையில் எமக்கு இதுவரையில் சர்வதேச நிதி உதவி கிடைக்கவில்லையென அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எமக்கு பல வழிகளிலும் கொவிட்-19 வைரஸுக்காக நிதியுதவி கிடைக்கப்பெற்று வருவதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் எமக்கு இதுவரையில் சர்வதேச நிதி உதவி கிடைக்கவில்லை, மேலும் உலக வங்கியின் மூலமாக 126 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிதித்தொகை கிடைக்குமென்ற நம்பிக்கையில் நாம் எமது இருப்பில் இருந்து செலவு செய்கின்றோம்.

எவ்வாறெனினும் இதுவரையில் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும்.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கனிய எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதால் இலங்கையில் எண்ணெய் விலையை குறைக்க முடியாது.

அது குறித்த தீர்மானம் எடுக்கும் முறையான திட்டமொன்று உள்ளது.

உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தால் அதன் இலாபம் மத்திய வங்கியில் எண்ணெய் குறித்த கணக்குகளில் சேரும்.

இவ்வாறு சேரும் நிதியிலிருந்து நாம் 200 மில்லியன்களை பெற்றுக்கொள்ள நினைக்கிறோம்.

எனினும் பெற்றோலியக்கூட்டுத்தாபனம் தற்போது கடனில் இயங்கி வரும் காரணத்தினால் குறித்த நிதியை கடன்களை நிரப்ப பயன்படுத்துவதே எமது நோக்கமாகும்.

இதன் மூலம் மக்கள் எதிர்காலத்தில் பயன்களை அடைந்துகொள்ள முடியும் இவ்வாறானதொரு திட்டமே எம்மிடம் உள்ளது.

விலை நிர்ணயம் ஒன்றினை உறுதியாக கடைப்பிடக்க வேண்டும்.

அவ்வாறு கடைப்படித்தால் நெருக்கடிகள் ஏற்படும் வேலைகளிலும் மக்களுக்கு சிரமங்களை வழங்காது கையாள முடியும்.

இந்நிலையில் அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுவது குறித்து பல விமர்சங்கள் எழுந்துள்ளன.

கடந்த காலங்களில் அரசாங்கங்களில் இதுபோன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை அமைச்சிகளின் செயலாளர்களாக நிமைத்திருக்கின்றார்கள், ஆகவே தான் ஜனாதிபதியும் தனக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பட்டதாரிகளையும், முப்படையினரையும் அமைச்சுக்களின் செயலாளராக நியமித்துள்ளார்.

குறித்த செயற்ப்பாட்டின் போது ஜனாதிபதி கட்சிகளையே பேதங்களையோ கருத்திற்கொள்ளாது, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களுக்கான சேவையையும் கருத்திற்கொண்டு இவ்வாறானதொரு முடிவை மேற்கொண்டுவருகிறார். என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!